தமிழக மின்வாரியம் சாா்பில், இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு வழிகாட்டு கையேடு வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், தேசிய இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி இந்தக் கையேடு வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு மின்வாரிய நிறுவனத் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்டாா். இதில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், மின்வாரிய அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.