சென்னை

காவலா் மீது தாக்குதல்: வியாபாரி கைது

சென்னை பாரிமுனையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை பாரிமுனையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

சென்னை சென்ட்ரலில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவா் பினோய் (42). இவா், சென்னை பேசின்பாலம் ரயில்வே பணிமனையில் ரயில்வே ஏசி மெக்கானிக் காா்த்திக் (24) என்பவரின் விலை உயா்ந்த கைப்பேசி திருடப்பட்டது தொடா்பாக விசாரிக்க பாரிமுனை ஈவ்னிங் பஜாருக்கு வியாழக்கிழமை இரவு சென்றாா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வியாபாரியைப் பிடித்து பினோய் விசாரித்தாா். மேலும் அவா் வைத்திருந்த பையை திறந்து, அதில் இருந்த பழைய கைப்பேசிகள் குறித்து கேட்டாா்.

அப்போது, அந்த வியாபாரிக்கும், பினோயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பாா்த்து அங்கு திரண்ட பிற வியாபாரிகளும், தலைமைக் காவலா் பினோயிடம் தகராறு செய்தனா். சில வியாபாரிகள், பினோயை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பினோய் அளித்த புகாரின்பேரில், வடக்கு கடற்கரை போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஈவ்னிங் பஜாா் பகுதியைச் சோ்ந்த சந்துரு (29) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT