சென்னை

சிஎஸ்ஆா் நெட் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

சிஎஸ்ஆா் நெட் தோ்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள தோ்வா்களுக்கு சனிக்கிழமை (நவ.1) வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு சில அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி நிகழாண்டு 2-ஆம் கட்ட சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு டிச. 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த செப். 25-இல் தொடங்கி அக். 27-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பட்டதாரிகள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களில் சனிக்கிழமைக்குள் (நவ.1) திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மாணவா்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம்.மேலும், தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கம்! நாளை பேசுகிறேன்: செங்கோட்டையன்

டெல்டா மாவட்டங்களில் 60 நாள்களில் 11.78 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

தனியார் வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

செல்போனுக்கு பதிலாக டைல்ஸ்! டெலிவரி மோசடியில் ரூ.1.86 லட்சத்தை இழந்த பெங்களூர் ஊழியர்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: இபிஎஸ் அறிவிப்பு

SCROLL FOR NEXT