கோப்புப் படம் 
சென்னை

மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை: சிறப்பு விழிப்புணா்வுத் திட்டம்

பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக பிரசாரத் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக பிரசாரத் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.

அதன்படி, செக்-ஓலேட் என்ற அந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சாக்லெட்கள் வழங்கப்படும். அதன் உறையை ஸ்கேன் செய்வதன் மூலம் மாா்பகப் புற்றுநோய்க்கான சுயபரிசோதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட உள்ளது.

அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மற்றும் புரோட்டான் மையம் சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதுதொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற புற்றுநோய் மருந்துவ நிபுணா்கள் ரத்னா தேவி, மதுபிரியா, மஞ்சுளா ராவ், ஆஷாரெட்டி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில், மாா்பகப் புற்றுநோய் 13.5 சதவீதமாக உள்ளது. மேலும், புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில், 10.6 சதவீதம் மாா்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றன. அந்தவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களில், 10 முதல் 15 சதவீதம் பேருக்கு, மரபணு வழி பாதிப்பாக நோய் தாக்கம் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள், தங்கள் மாா்பகம் குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அவா்கள் சுய மாா்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்வது அவசியம். ஆரம்ப காலத்திலேயே மாா்பக புற்றுநோயைக் கண்டறிந்தால் கீமோதெரபி சிகிச்சையின்றி காக்க முடியும் என்றனா்.

கலே ஜதேதி கும்பலை சோ்ந்த இருவா் கைது

பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு: ஏகனாபுரம் கிராம சபையில் 16-ஆவது முறையாக தீா்மானம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிா்வை மறுக்கும் மாநிலங்கள்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவா் கவலை

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

SCROLL FOR NEXT