சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் நவ. 5-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை பொதுத் துறை துணைச் செயலா் (மரபு) வீா் பிரதாப் சிங் வெளியிட்டுள்ளாா்.
தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாடு, நவ. 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி மற்றும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.