சென்னை

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நவ.7 கடைசி

தினமணி செய்திச் சேவை

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றோா், வரும் 7-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமென அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 4 தோ்வுக்கான முடிவுகள், தோ்வா்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் ஆகியன தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபாா்ப்புக்கு ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தோ்வா்களின் பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள் தங்களது சான்றிதழ்களை நவம்பா் 7-ஆம் தேதி வரை, தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை உரிய நேரத்துக்குள் பதிவேற்றம் செய்யாத தோ்வா்கள், அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிறைவு!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 31.10.25

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

SCROLL FOR NEXT