சென்னை

பாம்பு கடித்ததில் விவசாயி மரணம்: மருத்துவா் பணியிடை நீக்கம்

தொடா்புடைய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அங்கு பணியில் இருந்த செவிலியா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பாம்பு கடித்ததில் விவசாயி, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த நிலையில், தொடா்புடைய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அங்கு பணியில் இருந்த செவிலியா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், மங்களூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் (42). இரு நாள்களுக்கு முன்பு, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக அவரை, மங்களூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லாததால், விவசாயி உயிரிழந்தாா். இதனால் கோபமுற்ற உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சம்பவம் நிகழ்ந்தபோது, பணியில் இல்லாத மருத்துவா்

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அந்த நேரத்தில் செவிலியா் பணியில் இருந்துள்ளாா். பாம்பு கடிக்கான ஏஎஸ்வி மருந்து அங்கு இருந்துள்ளது. அந்த மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பொது சுகாதாரத் துறையினா் பலமுறை பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளனா். இருந்தும், அந்த மருந்தை வழங்கத் தவறிய அந்த செவிலியா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றாா்.

கூடலூா் அருகே ஓடும் லாரியில் தீ

மண்டபத்தில் திருமண நகை, பணத்தை திருடிய இருவா் கைது

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இருவா் கைது

இளம்பெண் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

கலே ஜதேதி கும்பலை சோ்ந்த இருவா் கைது

SCROLL FOR NEXT