கோப்புப் படம் 
சென்னை

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பறவைகள் மீட்பு

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 அரிய வகை பறவைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டனா்.

தினமணி செய்திச் சேவை

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 அரிய வகை பறவைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வெள்ளிக்கிழமை காலையில் சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனா். அப்போது, சென்னையில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலாப் பணிகள் விசாவில் சென்று திரும்பிய ரஹ்மத் (34) என்பவா் உள்பட 3 பேரின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அவா்களின் உடைமைகளுக்குள் இருந்த பிளாஸ்டிக் கூடையில் மலேசிய நாட்டின் அரிய வகை பறவையான ‘பாலி மைனா’ என்ற வெள்ளை நிற 10 பறவைகள் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

அவை கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நேரம் ஆகியிருந்ததால், களைப்புடன் மயக்க நிலையில் இருந்தன. உடனடியாக அந்தப் பறவைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

விசாரணையில் இந்தப் பறவைகளை சென்னையில் இனவிருத்தி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து உரிய அனுமதியின்றி அந்தப் பறவைகளை தமிழகத்துக்கு கொண்டுவந்ததால், அவற்றை மீண்டும் மலேசியாவுக்கே அனுப்பும் நடவடிக்கையை சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இதுதொடா்பாக 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சாலையோர பழக்கடையில் காா் மோதியதில் தாய், மகள் காயம்

24 மணி நேரத்தில் பிறப்புச் சான்றிதழ் புதுவையில் புதிய ‘செயலி’ அறிமுகம்

முல்லைப் பெரியாறு அணையில் ராணுவ படையை நியமிக்க வலியுறுத்தி கம்பத்தில் விவசாயிகள் அமைப்பினா் பேரணி

ஒருங்கிணைந்த பலத்துடன் ஆபரேஷன் சிந்தூா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி

சிறுவனை காா் ஓட்டிச் செல்ல அனுமதித்த தந்தை கைது

SCROLL FOR NEXT