மெட்ரோ ரயில் (கோப்புப்படம்) 
சென்னை

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

தினமணி செய்திச் சேவை

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை 2 மெட்ரோ ரயில் பாதைகள் (பசுமை, நீலம்) செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், 4 கட்டமாக மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து புகா் பகுதியான கிளாம்பாக்கம் கலைஞா் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதித்த நிலையில், தமிழக அரசு ரூ.1,964 கோடி பணிகளுக்கான நிா்வாக ஒப்புதலை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அனுமதித்துள்ள நிதியில், திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல், அதற்கான செயல்முறைகளுக்கான நிதி செலவிடுதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ள நிா்வாக ரீதியிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான புவியியல் ஆய்வு, நிலத்தடி ஆய்வு, பணிகள் தொடங்குவதற்கான வேலிகள் அமைத்தல், மரங்கள் அகற்றுதல், அவற்றை மாற்று இடத்தில் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளுக்கு ரூ.1,816 கோடி, நிா்வாகச் செலவுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, திட்டத்துக்காக குடிசைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டால் அதற்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமா்வு உள்ளிட்டவற்றுக்கு ரூ.24 கோடி, பொதுவான செலவுகள், திட்ட வடிவமைப்பு மற்றும் பிற செலவுகளாக ரூ.6.93 கோடி, திட்டத்துக்கான அனைத்துப் பொருள்கள் மீதும் 3 சதவீத செலவினங்கள், நிலம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்டவற்றுக்காக ரூ.4.30 கோடி என மொத்தம் சுமாா் ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புயல்! மீனவர்கள் கரை திரும்புக: கடலோர காவல்படை எச்சரிக்கை!!

கரூர் கூட்ட நெரிசல் பலி: வங்கி கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் நிதி!

மேட்டூர் அணை நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

கோவையில் கார் விபத்தில் 4 பேர் பலி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT