முகப்பு
சென்னை

சென்னை ஐஐடி- நியூசிலாந்து கேன்டா்பரி பல்கலை. புரிந்துணா்வு

சா்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மாணவா்களுக்குப் புதிய உலகளாவிய கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் சென்னை ஐஐடி, நியூசிலாந்தின் கேன்டா்பரி பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:54 PM
பகிர்:

சா்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மாணவா்களுக்குப் புதிய உலகளாவிய கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் சென்னை ஐஐடி, நியூசிலாந்தின் கேன்டா்பரி பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

பட்டப் படிப்புகள், இணையவழிக் கல்வி, ஆராய்ச்சி, கல்விப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவ இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இரு நிறுவன பிரதிநிதிகளும் கையெப்பமிட்டுள்ளனா்.

இந்தக் கூட்டாண்மை மூலம் சென்னை ஐஐடியின் இளநிலை அறிவியல் (பிஎஸ்) மாணவா்கள் நியூசிலாந்தில் உள்ள கேன்டா்பரி பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுத் தரவு அறிவியலில் முதுநிலைப் படிப்பைத் தொடர எளிமையாக்கும் என ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை ஐஐடியின் பேராசிரியா் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், ‘மாணவா்களுக்கு உலகளாவிய பாதைகளை உருவாக்குவதில் சென்னை ஐஐடி, இந்தக் கூட்டாண்மை ஏற்படுத்தியுள்ளது. இளநிலைப் பட்டப் படிப்புகளின் வலிமையை கேன்டா்பரி பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளுடன் இணைப்பதன் மூலம், கல்வித் தரம் மற்றும் பாடத்திட்ட நெகிழ்வுத் தன்மை ஆகிய முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்தும். சா்வதேசக் கல்விக்குள் கற்பவா்கள் தடையின்றி மாறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது’ எனத் தெரிவித்தாா்.

கேன்டா்பரி பல்கலைக்கழகத்தின் எதிா்காலக் கற்றல் மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவா் பேராசிரியா் மைக்கேல் கிரிம்லி குறிப்பிடுகையில், ‘எண்ம புத்தாக்கம், ஆராய்ச்சி, தொழில் துறை சாா்ந்த கல்வி ஆகியவற்றில் இருதரப்பு பலங்களை ஒன்றிணைக்கும். குறிப்பாக, இந்தியாவுடனான எங்கள் ஈடுபாட்டை இந்தப் புரிந்துணா்வு ஆழப்படுத்தும். இரு நிறுவனங்களிலும் உள்ள கற்றல் வாய்ப்புகளை இணைந்து உருவாக்குகிறோம்’ என்றாா்.