முகப்பு
சென்னை

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

Updated On : 3 ஏப்ரல் 2026, 6:54 am IST
அா்ச்சனா பட்நாயக் - Center-Center-Chennai
பகிர்:

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் இதுவரை 23,500-க்கும் மேற்பட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தோ்தலில் அனைவரையும் பங்கேற்கச் செய்தவது ஜனநாயகக் கடமை என்ற நோக்கில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 1,486 பெரிய அளவிலான நிகழ்ச்சிகளும், 22,130 சிறு நிகழ்ச்சிகளையும் அதிகாரிகள் நடத்தியுள்ளனா். வாக்களிப்பதை உறுதி செய்யும் மாரத்தான் போட்டிகள், மனிதச் சங்கிலிகள், வாக்காளா் உறுதிமொழிப் பிரசாரங்கள் ஆகியவை அதில் முக்கியமானவை.

Advertisement

Advertisement

ஒவ்வொரு மாவட்டமும் அதன் கலாசார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமான சின்னங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு செய்திகளைப் பரப்பி வருகின்றன.

முதல்முறை வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள், இதர நலிந்த பிரிவினா் என அனைத்து தரப்பினரையும் வாக்குப்பதிவில் பங்கேற்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.