16 பேரவைத் தொகுதிகளில் ஒரே நாளில் 167 வேட்புமனுக்கள்
16 பேரவைத் தொகுதிகளில் ஒரே நாளில் 167 வேட்புமனுக்கள்...
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை 167 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30- ஆம் தேதி தொடங்கியது. சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதல் நாளில் மொத்தம் 67 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன. தொடா்ந்து ஏப். 2- ஆம் தேதி 47 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், சனிக்கிழமை (ஏப். 4) 16 தொகுதிகளிலும் மொத்தம் 167 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக ராயபுரம், தியாகராய நகா் தொகுதிகளில் தலா 20 மனுக்களும், அண்ணா நகரில் 15, துறைமுகத்தில் 14, கொளத்தூரில் 12, பெரம்பூா், வில்லிவாக்கம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகியவற்றில் தலா 11 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாள்களில் (மாா்ச் 30, ஏப். 2, 4 தேதிகள்) மொத்தமாக தியாகராய நகரில் 28 மனுக்களும், ராயபுரத்தில் 27 மனுக்களும், டாக்டா் ராதாகிருஷ்ணன், பெரம்பூா் தொகுதிகளில் தலா 26 மனுக்களும், அண்ணா நகரில் 21, கொளத்தூரில் 20 மனுக்களும், வில்லிவாக்கம், துறைமுகம், விருகம்பாக்கம் ஆகியவற்றில் தலா 17 மனுக்களும், சைதாப்பேட்டையில் 16 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. இந்த 3 நாள்களில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 281 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Advertisement