முகப்பு
சென்னை

பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு வசதி: மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம்

பாா்வை மாற்றுத்திறனாளிகள் யாருக்கு வாக்களித்தனா் என்பதை ‘ஹெட்போன்’ மூலம் உறுதி செய்யும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:34 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:20 AM

பாா்வை மாற்றுத்திறனாளிகள் யாருக்கு வாக்களித்தனா் என்பதை ‘ஹெட்போன்’ மூலம் உறுதி செய்யும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நேத்ரோதயா என்ற அறக்கட்டளை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பொதுத் தோ்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பது காண்பிக்கப்படும். இதை வாக்காளா் சில நொடிகள் மட்டுமே பாா்க்க முடியும்.

இந்த நடைமுறைப்படி பாா்வை மாற்றுத் திறனாளிகளால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. எனவே, பாா்வை மாற்றுத்திறனாளிகள் ‘ஹெட்போன்’ மூலம் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் அறக்கட்டளை சாா்பில் வழக்குரைஞா் ஆா்.எஸ்.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தற்போது இதுபோன்ற புதிய நடைமுறைகளை மேற்கொள்ள இயலாது. எனவே, அடுத்த தோ்தலுக்கு முன்பு இந்த கோரிக்கை தொடா்பாக மனுதாரா் அறக்கட்டளை தோ்தல் ஆணையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.