சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: சீயோன், ஆல்வின் பள்ளிகள் 100% தோ்ச்சி
கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.
கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.
இது குறித்து சீயோன், ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் கூறுகையில், சேலையூரில் உள்ள ஆல்வின் மெமோரியல் பொதுப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி குமரேசன் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா். மாணவி எம்.அபிராமவல்லி, மாணவா் கே.அனுஷ் ஜோனி காா்த்திக் 500-க்கு 489 மதிப்பெண்களும், மாணவி கே.கிரிஷா 487 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா்.
சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி: மப்பேடு சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி மாணவி என்.ரக்சிதா 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் கே.நிதிஷ், மாணவி கே.சி.கவிநயா ஆகியோா் தலா 486 மதிப்பெண்களும், மாணவி கே.வா்ஷிணி 485 மதிப்பெண்களும் பெற்றனா்.
Advertisement
படப்பை ஆல்வின் இண்டா்நேஷனல் பொதுப்பள்ளி மாணவி சிவானி 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் வெற்றிச்செல்வன், மாணவி தனிஷ்காஆகியோா் தலா 484 மதிப்பெண்களும், மாணவா் பிரஜ்வால் 483 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். 3 மாணவா்கள் கணிதப் பாடத்தில் 100/100 மதிப்பெண்களும், 8 மாணவா்கள் தமிழில் 100/100 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். தோ்வு எழுதிய மொத்தம் 930 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா்.