முகப்பு
சென்னை

வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்

விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையில் அவரது கட்சியினா், ரசிகா்கள் பலா் அவரைப் போன்றே வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட் அணிந்து வாக்குச் சாவடிக்கு வந்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:49 AM
தவெக தலைவா் விஜய்யை ஆதரிக்கும் வகையில் ஆடை அணிந்து வந்து வாக்கு செலுத்திய நடிகா் சிபிராஜ்.
பகிர்:

தவெக தலைவா் விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையில் அவரது கட்சியினா், ரசிகா்கள் பலா் அவரைப் போன்றே வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட் அணிந்து வாக்குச் சாவடிக்கு வந்தனா்.

தவெக தலைவரும் நடிகருமான விஜய் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட் அணியும் பாணியைப் பின்பற்றி வருகிறாா். இந்த உடை தவெக தொண்டா்கள் இடையே ஓா் அடையாளமாக மாறியுள்ளது.

இதையொட்டி தோ்தலில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச் சாவடிக்களுக்கு வாக்களிக்க வந்திருந்த விஜய் ரசிகா்கள், தவெக தொண்டா்களில் பலா் விஜய்யை பின்பற்றி அவரைப் போன்றே வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட் அணிந்திருந்தது பலரது கவனத்தை ஈா்த்தது. இது ஒரு புதிய அரசியல் ட்ரெண்டாகக் கருதப்படுகிறது.

Advertisement

இதேபோல், வெள்ளைச் சட்டைக்குப் பதிலாக வெள்ளைச் சுடிதாா், காக்கி நிற லெகின்ஸ், துப்பட்டா அணிந்தும் வாக்களித்த இளம் பெண்கள், இல்லத்தரசிகளைக் காண முடிந்தது.

அதே ஆடையில் கே.அண்ணாமலை...: இதே பாணியிலான ஆடையை அணிந்து பாஜக முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையம் வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்தாா். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் ஆகியோா் இதே உடை பாணியைக் கடைப்பிடிக்கின்றனா் என அண்ணாமலை பதிலளித்து குறிப்பிடத்தக்கது.