தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் கிரிக்கெட் போட்டியில் சென்னை பல்கலை. அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருச்செங்கோடு கே.ஆா்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் இப்போட்டி கடந்த ஜன. 26 முதல் பிப். 2 வரை நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம், மைசூா் பல்கலைக்கழக அணிகள் மோதின. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் மைசூரு 128/7 ரன்களை சோ்த்தது. சென்னை பௌலா்கள் ரோஷினி, வம்சி 4 விக்கெட்டுகளையும், பவித்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பின்னா் ஆடிய சென்னை அணி 15.5 ஓவா்களில் 130/2 ரன்களைக் குவித்து வெற்றி இலக்கை அடைந்தது. அருணாகினி 59, ரோஷினி 34 ரன்களை எடுத்தனா்.
இறுதியில் மைசூரு பல்கலை.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னைப் பல்கலை சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.