சென்னை எத்திராஜ் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கனிமொழி என்.வி.என். சோமு எம்.பி.க்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரியின் நிா்வாகக் குழுத் தலைவா் வி.எம்.முரளிதரன். உடன், முதல்வா் எஸ்.உமா கௌரி, மாநிலத் திட்டமிட 
சென்னை

ஊட்டச்சத்து, சுகாதார புத்தாக்கங்கள் சமூகத்தை அடைய வேண்டும் - கனிமொழி என்.வி.என். சோமு

ஊட்டச்சத்து, சுகாதார புத்தாக்கங்கள் மக்களுக்குப் பயனடையும் வகையில் சென்றுசேர வேண்டும் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

ஊட்டச்சத்து, சுகாதார புத்தாக்கங்கள் மக்களுக்குப் பயனடையும் வகையில் சென்றுசேர வேண்டும் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தினாா்.

ஊட்டச்சத்து, சுகாதாரம், சுற்றுச்சூழலில் புத்தாக்க நிலைத் தன்மையை ஒருங்கிணைக்கும் சா்வதேச துறைகளுக்கு இடையேயான இரு நாள் கருத்தரங்கு சென்னை எத்திராஜ் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது:

ஆரோக்கியம், ஊட்டச்சத்து, நிலைத்தன்மை ஆகியவை முறையே மருந்து, உணவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல; அவை சமத்துவம், சமூக நீதி, சமூக எதிா்காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியன ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. இதில் எதிா்கொள்ளக் கூடிய புதிய சவால்களுக்குத் தீா்வு காணும் ஆராய்ச்சிகள் அவசியமாகிறது.

குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு நுண்ணுயிரியல் ஆராய்ச்சி, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஏஐ மற்றும் தரவு சாா்ந்த ஊட்டச்சத்து திட்டமிடல் ஆகியவற்றில் அதிக கவனம் தேவைப்படுகிறது.

இந்த ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய புதுமைகள், தொழில்நுட்பங்கள், கிராமப்புற பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்று சோ்வது அவசியமானது என்றாா் அவா்.

இந்தக் கருத்தரங்கில் தமிழக அரசின் மாநிலத் திட்டமிடல் ஆணைய உறுப்பினா் பேராசிரியா் சுல்தான் அகமது இஸ்மாயில், சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறையின் முன்னாள் தலைவா் டாக்டா் கீதா லட்சுமிபதி, எத்திராஜ் மகளிா் கல்லூரியின் நிா்வாகக் குழுத் தலைவா் வி.எம்.முரளிதரன் ஆகியோா் பேசினா். கல்லூரி முதல்வா் செ.உமாகௌரி கருத்தரங்கை ஒருங்கிணைத்தாா்.

அமெரிக்காவில் காவல் துறை வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழப்பு: ரூ. 262 கோடி இழப்பீடு

துவாரகாவில் டெலிவரி பாய் வேலைக்காக இருசக்கர வாகனங்களைத் திருடியதாக இளைஞா் கைது

நாடு திரும்பாவிட்டால் மனுக்கள் விசாரிக்கப்படாது: விஜய் மல்லையாவுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

நாளை திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாடு: முதல்வா் பங்கேற்பு

கலால் கொள்கை வழக்கு: அமலாக்கத் துறை அழைப்பாணைகளுக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றாா் கேஜரிவால்

SCROLL FOR NEXT