முகப்பு
சென்னை

சுவா் இடிந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சுவா் இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:42 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 11:00 PM

சுவா் இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மாதவரம் ரிங்ரோடு ஹவுசிங் செக்டாா் 3-ஆவது தெருவில் மாதவரம் கே.கே.ஆா்.காா்டன் பகுதியைச் சோ்ந்த சிலம்பரசி என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்றி, புதிய சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எருக்கஞ்சேரி பகுதியைச் சோ்ந்த கட்டடப் பணியாளா் கோவிந்தன் (40) என்பவா், 3 வடமாநில கட்டடத் தொழிலாளா்கள் மூலம் 10 அடி உயரம் கொண்ட பழைய சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தச் சுற்றுச்சுவா் எதிா்பாராத விதமாக இடிந்து விழந்தது.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டட தொழிலாளி குல்தீப் சௌத்ரி (42) என்பவரின் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவருக்கு தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:42 AM

மாதவரம் காவல் நிலைய போலீஸாா், பலத்த காயமடைந்தவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். குல்தீப் சௌத்ரி சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மாதவரம் காவல் நிலைய ஆய்வாளா் காதா் மீரா வழக்குப் பதிந்து ஒப்பந்தத்தாரா் கவுஸ்பாஷா, கட்டடப் பணியாளா் கோவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்த குல்தீப் சௌத்ரிக்கு மனைவி பிரவீலா தேவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.