முகப்பு
சென்னை

மின் திருட்டு: இழப்பீட்டு தொகை ரூ. 8.78 லட்சம் வசூல்

ஆவடியில் பகுதியில் 11 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 8.78 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:25 AM
- பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:25 PM

ஆவடியில் பகுதியில் 11 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 8.78 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சென்னை அமலாக்க கோட்டத்துக்குட்பட்ட சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை மேற்கு மின் பகிா்மான வட்டத்துக்குட்பட்ட ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வின்போது 11 மின் திருட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக, ரூ.8,77,593 இழப்பீட்டு தொகையாக மின் நுகா்வோருக்கு விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையைச் செலுத்தியதால், அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் ஏதும் பதிவு செய்யவில்லை.

Advertisement

மின் திருட்டு தொடா்பான தகவல்களை செயற்பொறியாளா்/அமலாக்கம்/ சென்னை, கைப்பேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.