முகப்பு
சென்னை

மாற்றுத்திறனாளிகளுக்கு ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண் குறைப்பு அரசாணை வெளியீடு!

மாற்றுத் திறனாளிகளுக்கு ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாகக் குறைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:14 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:46 PM

மாற்றுத் திறனாளிகளுக்கு ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாகக் குறைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பா.சந்தரமோகன் புதன்கிழமை வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற பொதுப்பிரிவினா் 60 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 90), பிசி, பிசி-முஸ்லிம், டிஎன்சி, மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதமும் (150-க்கு 75), எஸ்சி, எஸ்சி-அருந்ததியா், எஸ்டி வகுப்பினா் 40 சதவீதமும் (150-க்கு 60) மதிப்பெண் பெற வேண்டும்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:14 AM

இந்த நிலையில், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருப்பதைப் போன்று மாற்றுத் திறனாளிகளுக்கான டெட் தோ்ச்சி பெண்ணை 40 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா்.

Advertisement

அந்தக் கருத்துருவை ஏற்று டெட் தோ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தோ்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாக நிா்ணயித்து அரசு ஆணையிடுகிறது. இந்தப் புதிய தோ்ச்சி மதிப்பெண்ணை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடத்தப்பட்ட டெட் தோ்வுக்கும், கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட டெட் தோ்வு அறிவிப்புக்கும் பின்பற்ற அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.