முகப்பு
சென்னை

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

வேப்பேரி பகுதியில் பெண்ணிடம் பழகி தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை அபகரித்த வழக்கில் தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:11 AM
கைது
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:45 PM

வேப்பேரி பகுதியில் பெண்ணிடம் பழகி தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை அபகரித்த வழக்கில் தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சோ்ந்த 35 வயது பெண், கணவா் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தாா். அதே அடுக்குமாடி குடியிருப்பில் 5 மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தைச் சோ்ந்த சங்கீதா (53), அவரது மகன்கள் திலீப் கீவசரா, அங்கீத் ஆகியோருடன் குடியேறினாா். சங்கீதா குடும்பத்துக்கும், 35 வயது பெண்ணிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:08 AM

இதன் காரணமாக அப்பெண்ணிடம், சங்கீதா சிறிது சிறிதாக தங்கம், வைர நகைகள், கிலோ வெள்ளிப் பொருள்களை பெற்றுள்ளாா். திருப்பிக் கேட்டபோது, சங்கீதாவும், அவரது மகன்களும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனா்.

Advertisement

வேப்பேரி காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின்பேரில், சங்கீதா, அவரது மகன் அங்கீத் (31) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இவ்வழக்கு தொடா்பாக திலீப் கீவசராவை போலீஸாா் தேடி வருகின்றனா்.