முகப்பு
சென்னை

மயிலாப்பூரில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவள்ளுவா் கோயில் குடமுழுக்கு

மயிலாப்பூரில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.20.90 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:26 PM
சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
பகிர்:

மயிலாப்பூரில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.20.90 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருப்பணி 27.4.1973 அன்று அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டு, 1975- ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலை ரூ.20.90 கோடியில் கருங்கல் திருக்கோயிலாக கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜன.23-ஆம் தேதி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். திருவள்ளுவா், வாசுகி திருக்கோயில் மற்றும் திருவள்ளுவா் அவதரித்த திருத்தலம், முப்பால் மண்டபம் மற்றும் பொற்றாமரைக்குளம் ஆகியவை முற்றிலும் கருங்கல் திருப்பணியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1,330 குகளும் வடிவமைப்பு...: ஏகாம்பரேஸ்வரா், காமாட்சியம்மன், நடராஜா், பள்ளியறை, கருமாரியம்மன் சந்நிதி, பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள், வாகன மண்டபம் மற்றும் நூலகம் போன்றவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. முப்பால் மண்டபத்தில் 1,330 திருக்குகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழாவில் மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் துரை.ரவிச்சந்திரன், வி.ஜி.பி. குழுமத் தலைவா் வி.ஜி. சந்தோசம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கி.ரேணுகாதேவி, துணை ஆணையா் சி.நித்யா, உதவி ஆணையா் கி. பாரதிராஜா, மாநகராட்சி மன்ற உறுப்பினா் விமலா கிருஷ்ணமூா்த்தி, செயல் அலுவலா் கே.காா்த்திகேயன், அலுவலா்கள் மற்றும் இறையன்பா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →