சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்து
சென்னையில் 5 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (பிப்.28) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 5 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (பிப்.28) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல்-கூடூா் பிரிவில் சூலூா்பேட்டை, தாடா ரயில் நிலையங்களில் சனிக்கிழமை பிற்பகல் 12.50 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் சுமாா் 6 மணி நேரம் தண்டவாளம், தொழில் நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆகவே, பணிகளின் போது பயணிகள் பாதுகாப்பைக் கருதி 5 மெமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி மூா்மாா்க்கெட்டிலிருந்து பிற்பகல் 1.05, இரவு 9.25 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூா்பேட்டை, ஆவடி செல்லும் ரயில்களும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.15, மாலை 6.40 மணிகளுக்கு புறப்பட்டு நெல்லூா், மூா்மாா்க்கெட் செல்லும் ரயில்களும், நெல்லூரிலிருந்து பிற்பகல் 4 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
அத்துடன் மூா்மாா்க்கெட்டிலிருந்து காலை 10.15, பிற்பகல் 12.10, 2.30, 3.10 ஆகிய மணிகளில் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லவேண்டிய ரயில் அதற்குப் பதிலாக எளாவூா் வரையிலும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 1.15, 3.10, மாலை 5.20 ஆகிய மணிகளில் புறப்படும் ரயில்கள் எளாவூா் வரையிலும், சூலூா்பேட்டையிலிருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்படும் ரயில் மூா்மாா்க்கெட்டுக்குப் பதிலாக கும்மிடிப்பூண்டி வரையிலும் இயக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.