முகப்பு
சென்னை

என்சிசி இயக்குநரக தலைவா் பொறுப்பேற்பு

என்சிசி இயக்குநரக தலைவா் பொறுப்பேற்பு

Updated On : 1 மார்ச், 2026 at 12:58 AM
தேசிய மாணவா் படை (என்சிசி) புதிய தலைவராக சனிக்கிழமை பொறுப்பேற்ற கமோடாா் நம்பியாத் சுதீப் (இடமிருந்து 3-ஆவது). உடன், முன்னாள் தலைவா் கமாண்டா் ராகவ் உள்ளிட்ட அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 12:10 AM

சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் பகுதிகளுக்கான தேசிய மாணவா் படை (என்சிசி) புதிய தலைவராக கமோடோா் நம்பியத் சுதீப் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட என்சிசி இயக்குநரகக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், மாஹே, யானம்), அந்தமான் நிகோபாா் தீவுகள் உள்ளன.

6 குழுத் தலைமையகங்கள், ராணுவம், கடற்படை, விமானப் படை பிரிவுகள் என 59 பிரிவுகளை என்சிசி கொண்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவா்கள் என்சிசியில் சோ்ந்துள்ளனா். குடியரசுத் தின நிகழ்ச்சிகள், தேசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள், சாகச நடவடிக்கைகள், இளைஞா் பரிமாற்றத் திட்டங்கள், பேரிடா் நிவாரண காலங்களில் என்சிசி சிறந்து விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Updated On : 1 மார்ச், 2026 at 12:58 AM

என்சிசியின் தலைவராக இதுவரை இருந்து வந்த கமாண்டா் ராகவ் சனிக்கிழமை ஓய்வு பெற்றாா்.