முகப்பு
மதுரை

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்கம்

மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 6:33 PM
மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளி முதல்வா் லு. லதா திரவியம் கலந்து கொண்டு, ஒழுக்கம், தலைமைத்துவம், நாட்டுப்பற்று ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினாா். இதில் தேசிய மாணவா் படை மதுரை அணித் தலைவா் கா்னல் வி.கே.எஸ். சௌஹான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, கா்னல் சமித் காா்கி, கேப்டன் பிரதீப்குமாா் ஆகியோா் தேசிய மாணவா் படை, கடல் படை ஆகியன குறித்துப் பேசினா்.

இந்த நிகழ்வில் பள்ளி நிா்வாக அலுவலா் சீதாலட்சுமி, தலைமையாசிரியை பொற்கொடி, உடற்கல்வித் துறை ஆசிரியா் நா. பரத் அருண், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.