முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரி என்சிசி புதிய தலைவராக கமடோர் நம்பியத் சுதீப் பொறுப்பேற்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கான தேசிய மாணவர் படை என்சிசி புதிய தலைவர் கமடோர் நம்பியத் சுதீப் குறித்து...

Updated On : 28 பிப்ரவரி 2026, 3:36 pm IST
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கான என்சிசி புதிய தலைவராக பொறுப்பேற்ற கமடோர் நம்பியத் சுதீப்
பகிர்:

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கான தேசிய மாணவர் படை என்சிசி புதிய தலைவராக கமடோர் நம்பியத் சுதீப் பொறுப்பேற்றுள்ளார்.

அதன் முன்னாள் தளபதியான கமாண்டர் ராகவ் கடற்படை மற்றும் என்சிசி-யில் நீண்ட கால பணிக்குப் பிறகு இன்று ஓய்வு பெற்றார்.

என்சிசி புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கமடோர் நம்பியத் சுதீப்

சென்னையை தலைமையிடமாகக்கொண்ட என்சிசி இயக்குநரகம் தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உட்பட) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கியது.

Advertisement

Advertisement

இது இப்போது 6 குழு தலைமையகங்களையும், ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை பிரிவுகள் உட்பட சுமார் 59 பிரிவுகளையும் கொண்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் கேடட்களாக சேர்ந்துள்ளனர்.

குடியரசு நாள் நிகழ்ச்சிகள் மற்றும் என்சிசி படைப்பிரிவுகளில் தேசிய அளவில் சிறந்து விளங்குவதற்காக இந்த இயக்குநரகம் புகழ்பெற்றது.

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள், சாகச நடவடிக்கைகள், இளைஞர் பரிமாற்ற திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் போன்றவற்றிலும் இது புகழ்மிக்கதாகும்.

summary

Cmde Nambiath Sudeep has taken over as the new Deputy Director General of Headquarters National Cadet Corps (NCC) Directorate of Tamil Nadu, Puducherry and Andaman Nicobar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments