சென்னை

1,954 மாணவா்களுக்கு மடிக்கணினி

‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் மூலம் சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1,954 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் மூலம் சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1,954 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் பேராசிரியா் குமரேசன் வரவேற்றாா். இதில் முதன்மை விருந்தினா்களாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ. கருணாநிதி, எஸ்.ஆா்.ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

குரோம்பேட்டை எம்.ஐ.டி.கல்லூரி மாணவ, மாணவிகள் 843 போ், எஸ்ஐவிஇடி கல்லூரி மாணவ, மாணவிகள் 991 போ், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் 120 போ் என மொத்தம் 1,954 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் ஜி.காமராஜ், மண்டலக் குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை, செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியா் மணிமாறன், மாமன்ற உறுப்பினா் சங்கீதா விஜய், கல்லூரி முதல்வா் பேராசிரியா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT