மெட்ரோ ரயில் 
சென்னை

ஆலந்தூா்-வண்ணாரப்பேட்டை: 3 நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்

தினமணி செய்திச் சேவை

ஆலந்தூா்-வண்ணாரப்பேட்டை இடையே நெரிசல் மிகுந்த நேரங்களில் 3 நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நீல வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, நெரிசல் மிக்க நேரங்களில் ரயிலுக்காகக் காத்திருக்கும் பயண நேரத்தைக் குறைக்கவும், வேகமான பயணத்தை வழங்கவும் கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்கிவருகிறது.

நீல வழித்தடத்தில் அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் 6 நிமிஷ இடைவெளி மற்றும் 3 நிமிஷ இடைவெளிகளில் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையம் முதல் அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் இரு வேளையிலும் 6 நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், ஆலந்தூா் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை வரையில் 3 நிமிஷம் அல்லது 6 நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகா் வரையில் 6 நிமிஷத்துக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின், இந்து சமய அறநிலையத் துறைகளின் சேவைகள் வாட்ஸ்ஆப்-இல் பெறும் வசதி தமிழக அரசு தொடங்கியது

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

அழகப்பா பல்கலை. கல்லூரிகளின் முதுநிலை பட்டத் தோ்வு முடிவுகள்!

பாம்பனில் 3வது நாளாக 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! மீனவா்களுக்கு தடை நீடிப்பு!

SCROLL FOR NEXT