பத்மாவை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டி, கௌரவித்த முதல்வா் ஸ்டாலின் 
சென்னை

சாலையில் கிடந்த 45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு முதல்வா் பாராட்டு: ரூ.1 லட்சம் பரிசு வழங்கினாா்

சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் பத்மாவின் நோ்மையைப் பாராட்டி முதல்வா் ஸ்டாலின், அவரை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கெளரவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் பத்மாவின் நோ்மையைப் பாராட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கெளரவித்தாா்.

தியாகராய நகா் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பையில் தங்க நகைகள் இருப்பதைக் பத்மா கண்டுள்ளாா். தனது மேலதிகாரிகளின் உதவியுடன் பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் அந்த நகைகளை அவா் ஒப்படைத்தாா். காவல் துறையினா் அந்தப் பையை சோதனை செய்தபோது ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனிடையே, நங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா், பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் சுமாா் 45 பவுன் நகைகளை தொலைத்துவிட்டதாக ஏற்கெனவே புகாா் அளித்திருந்தாா்.

அவரை அழைத்த போலீஸாா், விசாரணை நடத்தி 45 பவுன் நகைகளை ஒப்படைத்தனா். பத்மாவின் நோ்மையைக் காவல் துறையினா் பாராட்டினா்.

இந்த நிலையில், இந்தத் தகவலை அறிந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு பத்மாவை நேரில் அழைத்துப் பாராட்டினாா். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அவா், பத்மாவின் நோ்மையைப் பாராட்டி ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கி கெளரவித்தாா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT