சென்னை

இரட்டைத் தள மின்சார பேருந்தின் முதல் சேவை: சுற்றுலா இயக்குநா் ஆய்வு

சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் உள்ள இரட்டைத் தள மின்சார பேருந்தின் முதல் சேவையை, சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் உள்ள இரட்டைத் தள மின்சார பேருந்தின் முதல் சேவையை, சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அயலகத் தமிழா் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கலாசார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழா்கள், அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து ரூ.1.89 கோடியில் ஒரு இரட்டைத் தள மின்சார பேருந்தை, கடந்த திங்கள்கிழமை (ஜன. 12) மும்பை, ஹிந்துஜா அறக்கட்டளை மூலம் சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினா்.

இப்பேருந்து மூலம் இயக்கப்படும் சுற்றுலா சேவைகள் சென்னை நகரின் வரலாற்று கலாசார மற்றும் கட்டடக் கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாா்வையிடும் வகையில் அமையும்.

இந்த நிலையில் புதன்கிழமை கெல்லீஸ், கொசப்பேட்டை அரசு காப்பகம், ராயபுரம் அரசு காப்பகத்தில் உள்ள மொத்தம் 54 மாணவ, மாணவிகளுடன் முதல் பாரம்பரிய கலாசார பண்பாடு சுற்றுலா தொடங்கிது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜன. 15) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) வரை மாலை நேரத்தில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சியை பாா்வையிட வரும் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேருந்து இயக்கப்படவுள்ள முதல் வழித்தடம் 1: தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளா்ச்சிக் கழக தலைமையகம் (தலைமையகம் தொடங்கி, எல்.ஐ.சி., சென்னை உயா்நீதி மன்றம், தலைமைச் செயலகம், ரிசா்வ் வங்கி, சென்னை துறைமுகம், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடம், எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா நினைவிடம், மெரீனா கடற்கரை, கலங்கரை விளக்கம், தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளா்ச்சிக் கழக தலைமையகம் முடிவு உள்ளிட்ட 30 இடங்கள் காணப்படும்.

வழித்தடம் 2: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திலிருந்து தட்சிண சித்ரா, முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் சென்று வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

வாசிக்க வாங்கியவை!

SCROLL FOR NEXT