சென்னை

காவல் துறை கழிவு வாகனங்கள் ஏலம்: ஜன.24-இல் முன்பதிவு

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜன.27-இல் ஏலம் விடப்பட உள்ள நிலையில், ஜன.24-இல் அதற்கான முன்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜன.27-இல் ஏலம் விடப்பட உள்ள நிலையில், ஜன.24-இல் அதற்கான முன்பதிவு நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவலில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 76 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 204 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 280 வாகனங்கள் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் ஜன.27 காலை 10 மணிக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏலத்துக்கான முன்பதிவு ஜன.24 காலை 10 முதல் பிற்பகல் 2 வரை சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் தங்கள் ஆதாா் அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன், கட்டணமாக ரூ.1,000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரா்கள் மற்றும் ஏலக்குழுவினா் முன்னிலையில் இந்த ஏலம் நடைபெறும்.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகையில் அன்றைய தினம் 25 சதவீத தொகையும், மீதமுள்ள ஏலத்தொகையான 75 சதவீத தொகை மற்றும் ஜிஎஸ்டி கட்டணத்தை மறுநாள் கட்டாயம் செலுத்திய பின்னரே விற்பனை ஆணை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இன்று நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயில்

சிரி... சிரி...

யோகா என்பது வாழ்க்கை முறை

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தில்லியில் ஆலோசனை

SCROLL FOR NEXT