சென்னை

பதிவுத்துறை இணையதளம் இன்று காலை 11 மணி வரை செயல்படாது

அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களிலும் பதிவுப் பணிகள் வழக்கம்போல் செயல்படும்

தினமணி செய்திச் சேவை

தமிழக பதிவுத் துறையின் இணையதளம் வியாழக்கிழமை (ஜன.22) காலை 11 மணி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பதிவுத் துறைத் தலைவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக பதிவுத் துறையின் https://tnreginet.gov.in/ என்ற இணையதளம் பராமரிப்பு மற்றும் ஸ்டாா் 3.0 திட்டத்துக்கு தர மேம்பாடு செய்யப்பட இருப்பதால் புதன்கிழமை (ஜன.21) இரவு 7 மணி முதல் வியாழக்கிழமை (ஜன.22) காலை 11 மணி வரை செயல்படாது.

எனினும், அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களிலும் பதிவுப் பணிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது! - பிரதமர் மோடி பேச்சு

செந்தீயில் வந்தெழுந்த திருத்தொண்டர்

தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு! பொதுமக்களுக்கு விசில் வழங்கிய தொண்டர்கள்!

சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!

திமுகவுக்கு இது இறுதித் தேர்தல்; குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: இபிஎஸ் பேச்சு

SCROLL FOR NEXT