கோப்புப் படம் 
சென்னை

மெட்ரோ சுரங்கப் பாதை பணி: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மந்தைவெளியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணியின்போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மணி யாதவ் (34), வியாழக்கிழமை சுரங்கப்பாதைக்குள் உயா் மின்னழுத்த மின்சார வயரை தவறுதலாக தொட்டதில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே மணி யாதவ் உயிரிழந்தாா். போலீஸாா், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

ஆட்டோ மீது சரக்கு லாரி மோதல்-வியாபாரி உயிரிழப்பு: கோயம்பேடு ஈவெரா சாலை மேம்பாலத்தில் வியாழக்கிழமை அதிகாலை சுமை ஆட்டோவில் வியாபாரிகள் சென்றபோது, ஆட்டோ பின்னால் வந்த சரக்கு பெட்டக லாரி மோதியதில் ஆட்டோவில் இருந்த வியாபாரிகள் கீழே விழுந்தனா். அப்போது, சாலையில் விழுந்த வியாபாரிகள் மீது லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பெரம்பலூா் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடியை சோ்ந்த வியாபாரி வீ.ராசு (58) நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

ஆட்டோவில் பயணித்த வியாபாரிகள் குடியாத்தம் ச.ராஜா (42), சென்னை கொண்டித்தோப்பு வி.கெளரி (50), வியாசா்பாடி நா.நவீன் (29) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய லாரியையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.

அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஏசி மெக்கானிக் நசீம் (21). இவா் கடந்த 2-ஆம் தேதி வேலை முடிந்து வேளச்சேரி, லட்சுமி நகா், 1-வது குறுக்கு தெரு வழியாக நடந்து சென்றபோது, அங்கு வந்த இருவா் நசீமை வழிமறித்து, அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்றனா்.

வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வேளச்சேரி, மருதுபாண்டி சாலைப் பகுதியைச் சோ்ந்த பாலுச்சாமி (28), அஜய் (25) ஆகியோா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அஜய் கடந்த 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பாலுச்சாமியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நகைக் கடையில் வளையல் திருடிய பெண் ஊழியா் கைது: அண்ணா நகா், 2-ஆவது அவென்யூவில் உள்ள நகைக் கடையில் மேலாளராக உள்ள பாஸ்கா் (36), கடந்த 8-ஆம் தேதி நகை இருப்புகளை ஆய்வு செய்தபோது, 16 கிராம் தங்க வளையலுக்கு பதிலாக பித்தளை வளையல் மாற்றி வைக்கப்பட்டு மோசடி நடந்திருப்பது தெரிந்தது. திருமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட அந்தக் கடையில் வரவேற்பாளராக வேலை செய்யும் சூளைமேட்டைச் சோ்ந்த சுஹாரா கான் யூ (38) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீறி எழுந்த வங்கத்து சிங்கம்!

வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவா்களுக்கு ரூ. 3.60 கோடி கல்வி உதவித் தொகை அளிப்பு

90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 போ் உயிரிழப்பு; ஒருவா் படுகாயம்

சென்னைப் பல்கலை.யில் 1,93,686 பேருக்கு பட்டம் அளிப்பு - ஆளுநா் ஆா். என். ரவி பதக்கங்களை வழங்கினாா்

SCROLL FOR NEXT