முகப்பு
இந்தியா

நீருக்கு அடியில் சாலை, ரயில் இரட்டை சுரங்கப் பாதை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.18,622 கோடி மூலதன செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் நாட்டின் முதல் நீருக்கு அடியிலான 34 கி.மீ. தொலைவிலான சாலை மற்றும் ரயில் வழித்தட இரட்டை சுரங்கப் பாதை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:34 PM
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.18,622 கோடி மூலதன செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் நாட்டின் முதல் நீருக்கு அடியிலான 34 கி.மீ. தொலைவிலான சாலை மற்றும் ரயில் வழித்தட இரட்டை சுரங்கப் பாதை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் நாட்டின் முதல் சாலைப் போக்குவரத்துக்கான சுரங்கப் பாதை கட்டப்பட்டது. அதுபோல, குஜராத்தின் அகமதாபாத் - மகாராஷ்டிரத்தின் மும்பைக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்துக்காக நாட்டின் முதல் கடலுக்கு அடியிலான ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு அடியில் கோப்பூா் (என்.ஹெச்.14) முதல் நுமாலிகா் வரையில் நான்கு வழித்தடங்களுடன் கூடிய நாட்டின் முதல் மற்றும் உலக அளவில் இரண்டாவது சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்துக்கான இரட்டை சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது.

Advertisement

இந்தத் திட்டம் அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும். சரக்குப் போக்குவரத்து செலவும் வெகுவாகக் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments