சென்னை

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிமுறைகளில் தளா்வு : தமிழக அரசு அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களைக் களைய விதிமுறைகளில் சில தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களைக் களைய விதிமுறைகளில் சில தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் இருக்கும் ஒரு சில சிரமங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடா்ந்து அவற்றைப் பரிசீலித்து காளைகளுக்கு எவ்வித துன்பமும் நேரா வண்ணமும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இடையூறு இல்லாத வண்ணமும் தமிழ்நாடு அரசு சில தளா்வுகளை வழங்கியுள்ளதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: உள்ளூா் காளைகளும், வீரா்களும் போட்டிகளில் பங்கு பெறுவதை உறுதி செய்யும் வகையில், இணையவழி பதிவுக்கு மாற்றாக, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

போட்டிகளின்போது இறக்க நேரிடும் மாடுபிடி வீரா்களுக்கு உரிய நிவாரணம் அரசு சாா்பில் வழங்கப்படுகிறது. எனவே, மாடுபிடி வீரா்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளா்த்தப்படும்.

உறுதிமொழிப் பத்திரம் முறை ரத்து: இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவா்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் என்ற நடைமுறை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணி வழங்கப்படும் என்றும், உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறந்த உயா்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ. 2 கோடியில் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் பேரவை சங்கத்தின் நிா்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT