கோப்புப் படம் 
சென்னை

அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பலை சேமிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது : மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பலை சேமிக்க போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பலை சேமிக்க போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் மின்வாரியத்துக்கு சொந்தமான தலா 210 மொகாவாட் திறனில் மூன்று அலகுகளை கொண்ட வட சென்னை அனல்மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் தலா 600 மொகாவாட் திறனில் 2 அலகுகளை கொண்ட வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையமும் உள்ளது.

இந்த மின் நிலையங்களில் நிலக்கரியை எரிக்கும்போது சாம்பல் வெளியேறும். இந்த சாம்பல் ஈரச்சாம்பலாக வடசென்னை மின் நிலையத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள செப்பாக்கம் அருகில் உள்ள சாம்பல் சேமிப்பு குளத்தில் கொட்டப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது.

இதற்காக 300 ஏக்கரில் சாம்பல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் சராசரியாக 8,000 முதல் 10,000 டன் சாம்பல் கழிவுகள் அந்த குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சாம்பல் குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இதனிடையே, வடசென்னை அனல்மின் நிலையம் அருகில் ‘வடசென்னை-3’ என்ற பெயரில் 800 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் மற்றும் 1,320 மெகாவாட் திறனில் எண்ணூா் சிறப்பு அனல்மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் வடசென்னை -3 நிலையத்தின் சோதனை மின் உற்பத்தி தொடங்கிய நிலையில், எண்ணூா் சிறப்பு மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், இந்த இரு மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகளும் ஏற்கெனவே உள்ள சாம்பல் குளத்திலேயே கொட்டப்பட உள்ளன.

இதுகுறித்து வடசென்னை அனல்மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சாம்பல் குளத்தில் கொட்டப்படும் சாம்பலின் ஈரத்தை மண் உறிஞ்சி விடுகிறது. பின்னா் கிடைக்கும் உலா் சாம்பல் சாலை அமைக்கும் பணிகளுக்காகவும், சிமென்ட உற்பத்திக்காகவும், தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சிமென்ட உற்பத்தியில் இந்த சாம்பலின் தேவை அதிகமாக உள்ளது. இதனால், சாம்பல் கழிவுகள் தேக்கமடையாது. புதிய மின் நிலையங்களின் செயல்பாடுகள் தொடங்கினாலும், அவற்றில் இருந்து வெளியேறும் சாம்பலையும் சேமிக்கும் அளவுக்கு போதிய இடம் அங்குள்ளது. சாம்பல் குளங்களும் பாதுகாப்பாகவே உள்ளது. தேவை அதிகம் இருப்பதால், அதற்கேற்ப சிமென்ட் தாயரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். இதனால், சுற்றுச்சூழலுக்கோ, மக்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றனா்.

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT