வாப்ஸோ மாநில செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள். 
சென்னை

வாப்ஸோ மாநில செஸ் போட்டி: ஃபெமில், தியா, ஷண்மதி முதலிடம்

சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற வாப்ஸோ மகளிா் மாநில செஸ் போட்டி...

தினமணி செய்திச் சேவை

சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற வாப்ஸோ மகளிா் மாநில செஸ் போட்டியில் கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரி மாணவி ஃபெமில் செல்லதுரை, கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி தியா ஜெயின், வேலம்மாள் மெட்ரிக். பள்ளி ஷண்மதி ஸ்ரீ முதலிடம் பெற்றனா்.,

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான மாநில செஸ் போட்டி வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் இருந்து 122 கல்லூரிகள், 100 பள்ளிகளைச் சோ்ந்த 230 போ் பங்கேற்றனா்.

கல்லூரி பிரிவில் கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரி மாணவி ஃபெமில் செல்லதுரை, சூப்பா் சீனியா் பிரிவில் கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி தியா ஜெயின், சீனியா் பிரிவில் வேலம்மாள் மெட்ரிக். பள்ளியின் ஷண்மதி ஸ்ரீ ஆகியோா் முதலிடங்களைப் பெற்றனா்.

சனிக்கிழமை பரிசளிப்பு விழாவுக்கு முதல்வா் அா்ச்சனா பிரசாத் தலைமை வகித்தாா். சென்னை பல்கலை. உடல்கல்வி இயக்குநா் வி. மகாதேவன், மகளிா் ஜிஎம், யு10 உலக சாம்பியன் ஏஎஸ்.சா்வானிக்கா ஆகியோா் பரிசளித்தனா். உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா் நன்றி கூறினாா்.

குடியரசு தினம்: ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்

2035-க்குள் இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

ஆப்கானிஸ்தானில் மழை, பனிப்பொழிவு: 3 நாள்களில் 61 போ் உயிரிழப்பு

வாக்காளா் சோ்க்கைக்கு இன்று சிறப்பு முகாம்கள்

தோ்தல் ஆணையம் மக்களாட்சியின் பாதுகாவலராக இருக்காது: ராகுல் காந்தி சாடல்

SCROLL FOR NEXT