சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவா மகளிா் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான வாப்ஸோ மாநில செஸ் போட்டிகள் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் நடைபெறுகின்றன.
சீனியா் பிரிவில் 8, 9, 10 வகுப்புகளுக்கும், சூப்பா் சீனியா் பிரிவில் 11, 12 வகுப்புகளுக்கும், கல்லூரி இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளுக்கும் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.10 லட்சம் ஆகும்.
போட்டி ஏற்பாடுகளை முதல்வா் அா்ச்சனா, உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா் செய்துள்ளனா். தொடா்புக்கு: 98407 37407.