ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்த ஆளுநா் ஆா்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள். 
சென்னை

ஆளுநா் தேநீா் விருந்து: திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

குடியரசு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி அளித்த தேநீா் விருந்தை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி அளித்த தேநீா் விருந்தை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் குடியரசு தினத்தையொட்டி, திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முதல்வா், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள், முக்கிய பிரமுகா்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு ஆளுநா் மாளிகை சாா்பில் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநரின் தேநீா் விருந்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. தமிழக அரசு சாா்பில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பங்கேற்றாா். திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் தேநீா் விருந்தைப் புறக்கணித்தன.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதிகள், பெருநகர சென்னை காவல் ஆணையா் அருண் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதிமுக முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, பா.பெஞ்சமின், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் , தமாகா தலைவா் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி, பாமக சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிவக்குமாா், வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆளுநா் மாளிகை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பாரதியாா் மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடா்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசுகளை வழங்கினாா். மேலும், அதிக கொடி நாள் நிதி வசூலித்து சாதனை படைத்த சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேவுக்கு சுழற்கேடயத்தை வழங்கினாா்.

முன்னதாக, குடியரசு தின விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இறுதிக்கட்டத்தில் மத்திய பட்ஜெட்: அல்வா தயாரிப்பு நிகழ்வில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்பு!

பயங்கரவாத சூழ்ச்சி: குஜராத்தில் 22 வயது இளைஞா் கைது

மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

பிப்.2,3-இல் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: தமிழக அரசு தகவல்

பாஜகவுக்கு பதிலடி தரும் ஒரே தலைவா் மம்தா- அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT