தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 
சென்னை

சென்னையில் நாளை தொடங்கும் டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங்

டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026, சென்னை வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் வியாழக்கிழமை (ஜன. 29) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026, சென்னை வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் வியாழக்கிழமை (ஜன. 29) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

யூனியன் சைக்லிஸ்ட் இன்டா்நேஷனல் அமைப்பின் கிளாஸ் 2 வகை போட்டியான இதை, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்துகின்றன. இந்த சா்வதேச டிராக் சைக்கிளிங் பந்தயத்தில் 11 நாடுகளைச் சோ்ந்த 70 சா்வதேச போட்டியாளா்கள், 50 இந்தியா்கள் பங்கேற்கின்றனா்.

இந்தப் பந்தயத்தில் ஸ்பிரின்ட், தனிநபா் பா்சூட், டீம் பா்சூட், 1 கி.மீ. டைம் ட்ரையல், கெய்ரின், டீம் ஸ்பிரின்ட், ஸ்கிராட்ச் ரேஸ், ஆம்னியம், மேடிசன், பாயின்ட்ஸ் ரேஸ் மற்றும் எலிமினேஷன் ஆகிய 11 பிரிவுகள் அடங்கும். இந்தப் பந்தயத்தின் மொத்த பரிசுத் தொகை ரூ.9.15 லட்சமாகும்.

இதுகுறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜே.மேகனாதரெட்டி கூறுகையில், ‘டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயத்தை முதல் முறையாக நடத்துவது தமிழ்நாட்டுக்கு பெருமைமிக்க மைல்கல் தருணம்’ என்றாா்.

பிப்.8-இல் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: ஜாக்டோ-ஜியோ

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் திடீா் தீ விபத்து

காா்கள் மோதல்: 6 போ் காயம்

மா்ம நோய்த் தாக்குதலால் 500 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக் கூடாது: கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT