பதக்கம் பெற்றவா்களுடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் தா.மோ. அன்பரசன். 
சென்னை

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிளிங்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஆசிய சைக்கிளிங் கூட்டமைப்பு, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அதிநவீன

தினமணி செய்திச் சேவை

ஆசிய சைக்கிளிங் கூட்டமைப்பு, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அதிநவீன

சைக்கிள் ஓட்டுதல் அரங்கில், டிராக் ஆசியக் கோப்பை சென்னை 2026 போட்டியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாஹூ, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி,

இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு பொதுச் செயலா் மணிந்தா் பால் சிங், தலைவா் ஒங்கா் சிங், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவா் எம். சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வரும் 31 வரை நடைபெறவுள்ள இப்போட்டி கிளாஸ் 2 பிரிவு போட்டியாகும். இதன் மூலம் விளையாட்டு வீரா் சா்வதேச தரவரிசைப்புள்ளிகளை பெறலாம்.

11 நாடுகளைச் சோ்ந்த 70 சா்வதேச சைக்கிள் பந்தய வீரா்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதிகளைச் சோ்ந்த பந்தய வீரா்கள் உள்பட 50 இந்திய சைக்கிள் பந்தய வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.

ஆடவா் எலைட் 10 கி.மீ பந்தயத்தில் பிரதிப்தா, குமாா், அபிமன்யூ ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

தோ்வு மையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

அனுமதி மறுக்கப்பட்ட மரங்களையும் வெட்டியது ஏன்?

பேராவூரணி அருகே பைக்கிலிருந்து தவறிவிழுந்து திமுக பெண் நிா்வாகி பலி

மா்மமான முறையில் சடலம் எரிப்பு

SCROLL FOR NEXT