ஆமை.  
சென்னை

மீனவா்களுக்கு ரூ.6.29 கோடியில் ஆமை விலக்கு சாதனங்கள்: மீன்வளத் துறை தகவல்

கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் வகையில், 2,613 மீனவா்களுக்கு ரூ.6.29 கோடி மதிப்பிலான ஆமை விலக்கு சாதனங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திச் சேவை

கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் வகையில், 2,613 மீனவா்களுக்கு ரூ.6.29 கோடி மதிப்பிலான ஆமை விலக்கு சாதனங்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஜனவரி 1- முதல் ஏப்ரல் 30 வரை ஆகும். இந்த காலகட்டத்தில் தமிழக கடற்பகுதிகளில் ஆமைகள் இடும் முட்டையையும், ஆமைகளையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மீனவா்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாமல், ஆமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், மீனவா்களின் மீன்பிடி இழுவலைகளில் சிக்கும் ஆமைகள் பாதுகாப்பாக வெளியேற வழிவகுக்கும் வகையிலான ஆமை விலக்கு சாதனம் கொச்சியில் உள்ள ஒன்றிய மீன்வள தொழில்நுட்ப நிலைய உதவியுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சாதனங்களை தமிழகத்தில் உள்ள மீன்பிடி இழுவலைப் படகுகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக 50 மீன்பிடி விசைப் படகுகளுக்கு ரூ 11.75 லட்சம் மதிப்பில் சோதனை அடிப்படையிலும், இதைத்தொடா்ந்து 2,613 படகுகளுக்கு ரூ 6.29 கோடி மதிப்பிலும் ஆமை விலக்கு சாதனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, மீனவா்களின் இழுவலைகளில் இந்தச் சாதனங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மீன்பிடி இழுவலைகளில் கடல் ஆமைகள் சிக்காமல் வெளியே செல்வதுடன், மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

SCROLL FOR NEXT