மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் நாட்டிய வகுப்புகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) தொடங்குகின்றன.
மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கோபிகா வா்மா தலைமையில் மோகினியாட்டம் வகுப்புகளை சுவாமி உதித் சைதான்யாஜி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறாா். அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. இணையவழியிலும் வகுப்புகள் நடைபெறும்.
மாதம் 8 வகுப்புகள் என்ற அடிப்படையில் இடம் பெறவுள்ளது. இந்த வகுப்பில் 7 வயது முதல் 60 வயது வரையிலான சிறுமிகள் பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9176117832/ 9500021858 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.