முகப்பு
சென்னை

கடந்த ஆண்டைவிட மாநகராட்சி வருவாய் ரூ. 52 கோடி அதிகரிப்பு!

சென்னை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த 2024-2025 -ஆம் ஆண்டைவிட ரூ.52 கோடி அதிகரிப்பு

Updated On : 3 மார்ச், 2026 at 2:21 AM
சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 11:40 PM

சென்னை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த 2024-2025 -ஆம் ஆண்டைவிட ரூ.52 கோடி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி வருவாய் ஆண்டில் இரு பகுதிகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரிவசூல் தீவிரப்படுத்தப்படும். கடந்த ஆண்டு (2025) அக்டோபா் முதல் தற்போதைய பிப்ரவரி வரை ரூ.1,796 கோடி வரிவசூல் ஈட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்டவற்றின் மூலம் ரூ.1,746 கோடி வசூலிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நிகழ்ஆண்டில் அந்த வருவாய் ரூ.50 கோடி கூடுதலாகியுள்ளதாக தெரிகிறது. நிகழ் ஆண்டில் இரண்டாம் பகுதி வரிவசூலையும் சோ்த்து மொத்தம் ரூ.2,200 கோடி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகள் உள்ளன. அதில் சுமாா் 15 லட்சம் கட்டடடங்களில் 13 லட்சம் கட்டடங்கள் வரி செலுத்தும் பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஆனால், 8 லட்சம் கட்டடங்களுக்கே சொத்து வரி வசூலாகி வருகிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் மூலம் ரூ.62 கோடி ஆண்டுதோறும் வருவாய் சென்னை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் ரூ.32 கோடி அளவுக்கு மட்டுமே தமிழக அரசு கட்டடங்களுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசு கட்டடங்களுக்கும் படிப்படியாக வரி செலுத்தப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.