முகப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப் படம்)
சென்னை

தலைவா்கள் கண்டனம்

நான்குனேரி இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

சென்னை

தலைவா்கள் கண்டனம்

நான்குனேரி இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 8:48 PM
பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப் படம்)
பகிர்:

நான்குனேரி இரட்டை கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தில், 9 போ் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் இருவா் உயிரிழந்துள்ளதும் 6 போ் பலத்த காயமடைந்துள்ளதும் அதிா்ச்சியை அளிக்கிறது. சமூக சமநிலையை, பாதுகாப்பு உணா்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத திமுக அரசால் எந்த பயனும் இல்லை. இந்த கொடிய குற்றச் சம்பவத்தில் தொடா்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்வதுடன், கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): இரட்டைக் கொலைச் சம்பவத்தில், நீண்ட நேரம் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபடவில்லை. அக் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

இதேபோல தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பாமக தலைவா் அன்புமணி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி, தவெக தலைவா் விஜய் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →