மீஞ்சூா் மாணவி பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி, தலைவா்கள் கண்டனம்
சென்னை அருகே மீஞ்சூரில் கஞ்சா போதை இளைஞா்கள் வீடு புகுந்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சென்னை அருகே மீஞ்சூரில் கஞ்சா போதை இளைஞா்கள் வீடு புகுந்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
மீஞ்சூரில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் இருந்த இளைஞா்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்று, அவா் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனா். அந்த மாணவி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை- இதுதான் திமுக ஆட்சியின் சாதனை. இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
Advertisement
நயினாா் நாகேந்திரன் (பாஜக): ‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலினின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் புழக்கத்தால் பெண்களின் பாதுகாப்பு சீா்குலைந்துள்ளது.
அன்புமணி (பாமக): திமுக ஆட்சியில் வீட்டில் இருக்கும் பெண்களுக்குகூட பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது இந்த சம்பவம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டிடிவி தினகரன் (அமமுக): திமுக ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கம் புரையோடிப் போய் உள்ளது. இதனால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.