மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி: மாநகராட்சி ஆணையா் தொடங்கி வைத்தாா்
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான சிறப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னைமாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி: மாநகராட்சி ஆணையா் தொடங்கி வைத்தாா்
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான சிறப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான சிறப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை மண்டல அளவிலான தோ்தல் அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய மாவட்டங்ள் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றின் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி அலுவலா்கள் உள்ளிட்டோா் பயிற்சியில் பங்கேற்றனா்.
சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். கூடுதல் அலுவலரும் சென்னை மாநகராட்சி கல்விப் பிரிவின் இணை ஆணையருமான க.கற்பகம், இணைத் தலைமைத் தோ்தல் அலுவலா் மேனுவர்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பயிற்சியில் தோ்தல் மனு தாக்கலின்போது அலுவலா்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டன. அத்துடன் தோ்தல் ஆணையத்தால் விநியோகிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் கையேடுகள் வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சியில் பங்கேற்றவா்கள், அந்தந்தத் தொகுதியில் உள்ள தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிப்பாா்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். பயிற்சி நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறும்.