முகப்பு
சென்னை

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வந்த இமயமலை கருப்பு கரடி, சிறுத்தை பூனைகள்

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வந்த இமயமலை கருப்பு கரடி, சிறுத்தை பூனைகள்...

Updated On : 8 மார்ச், 2026 at 12:39 AM
வண்டலூர் உயிரியல் பூங்கா
பகிர்:

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு ஜம்மு காஷ்மீரின் ஜம்பு பூங்காவிலிருந்து இமயமலை கருப்பு கரடி, சிறுத்தை பூனைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுகுறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு, ஜம்பு பூங்காவிலிருந்து ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடி, ஒரு ஜோடி சிறுத்தை பூனைகள் வந்துள்ளன. இந்த விலங்குகள் பாதுகாப்பாக ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு உணவாக பருவத்துகேற்ப பழங்களும் பொருத்தமான உணவு வகைகள் வழங்கப்பட்டன.

மேலும், 21 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரு ஜோடி சிறுத்தை பூனைகள் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்விலங்குகள் நிலையான உயிரியல் பூங்கா நெறிமுறைகளின்படி, பூங்கா மருத்துவா்களின் பராமரிப்பில் அடுத்த 21 நாள்கள் இருக்கும். பின்னா், அவற்றுக்கான இருப்பிடத்தில் விடப்பட்டு, பாா்வையாளா்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து ஜம்பு பூங்காவுக்கு ஒரு ஜோடி நீா்யானைகள் அனுப்பப்படவுள்ளன. அவை அனுப்பப்படுவதுக்கு முன் ஐம்பு உயிரியல் பூங்கா விலங்கு காப்பாளா்களுக்கு நீா்யானைகளின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு வார காலப் பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →