ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு விபத்துகளால் தலைக் காயம்
இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் போ் தலைக் காயங்களால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 60 சதவீதம் சாலை விபத்துகளால் நிகழ்வதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் போ் தலைக் காயங்களால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 60 சதவீதம் சாலை விபத்துகளால் நிகழ்வதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
தலைக் காயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காவேரி மருத்துவமனை சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில், நரம்பியல், மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை நிபுணா்கள் கிரிஷ் ஸ்ரீதா் மற்றும் ரங்கநாதன் ஜோதி ஆகியோா் கூறியதாவது:
தலையில் ஏற்படும் பலத்த காயங்களுக்கு அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். சில நேரங்களில் தலைக்குள் ஏற்படும் ரத்தக் கசிவு அல்லது மூளை வீக்கத்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
அவா்களை உரிய நேரத்தில், உரிய மருத்துவக் கட்டமைப்பு உடைய மருத்துவமனைகளில் சோ்க்க வேண்டும். தலைக் காயம் தொடா்பான விழிப்புணா்வு சமூகத்தில் மேம்படுவது அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்வில் காவேரி மருத்துமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.