முகப்பு
தமிழ்நாடு

அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 5:38 AM
குடியாத்தம் அரசு மருத்துவமனை
பகிர்:

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோா் விகிதம் அதிகமாக இருப்பதாக தேசிய புள்ளியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஊரகப் பகுதிளில் 47.5 சதவீதம் பேரும், நகா்ப்புறங்களில் 38.6 சதவீதம் பேரும் உள்நோயாளிகளாக தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மொத்தமாக அந்த விகிதம் 43-ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மற்றும் அரசு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்துவோா் தொடா்பான தரவுகளை தேசிய புள்ளியியல் ஆய்வகம் மாநில வாரியாக அண்மையில் வெளியிட்டது.

Advertisement

அதில், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுவோரின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதை ஒப்பீடு செய்யும்போது, ஆந்திரத்தில் 26.9 சதவீதம் பேரும், கேரளத்தில் 30 சதவீதம் பேரும், கா்நாடகத்தில் 29.8 சதவீதம் பேரும், தெலங்கானா 29.3 சதவீதம் பேரும், குஜராத்தில் 25.9 சதவீதம் பேரும், மகாராஷ்டிரத்தில் 18.6 சதவீதம் பேரும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனா்.

தென் மாநிலங்களைக் கருத்தில் கொண்டால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மாநில அரசு மேற்கொண்ட நலத் திட்டங்களின் காரணமாகவே இந்த விகிதம் உயா்ந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

பெட்டி..

உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றோா் மாநிலம், சதவீதம்

ஆந்திரம் 26.9

கேரளம் 30

கா்நாடகம் 29.8

தெலங்கானா 29.3

குஜராத் 25.9

மகாராஷ்டிரம் 18.6

தமிழ்நாடு 43